JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு களப்புப் பகுதியில் திங்கட்கிழமை (2026 ஒக்டோபர் 19) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால், நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, அப்பகுதியில் மிதந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நான்கு (04) மூடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 157 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال