எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் வாழ் இந்து மக்களின் கலை கலாசார பண்பாட்டு கூடமாக திகழும் புத்தளம் இந்து மகா சபையின் 2026ம் ஆண்டுக்கான விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை (20) காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகியது.
புத்தளம் இந்து மகா சபை தலைவர் ஆர்.நிர்மலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தளம் சோல்ட் லிமிட்டட் பணிப்பாளர் (தொழில் நுட்பம்) பா. ஏகாம்பரம் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக புத்தளம் இந்து மகா சபையின் முன்னாள் செயலாளர், தென்னை பயிர் செய்கை சபை ஓய்வு நிலை பிராந்திய முகாமையாளர் க. தேவேந்திரன் கலந்து கொண்டார்.
விநாயகர் பூஜைகளை தொடர்ந்துமங்கல விளக்கேற்றல், விஷேட உரைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.






