JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் நடைபெற்ற PFA உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி: Little Star அணி சம்பியன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் உதைபந்தாட்ட அகாடமியின் (Puttalam Football Academy – PFA) ஏற்பாட்டில், தரம் 01 முதல் தரம் 05 வரையிலான மாணவர்களுக்காக நடத்தப்பட்ட PFA 5-A-SIDE FUTSAL 2026 உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி, புத்தளம் Zain Futsal மைதானத்தில் நடைபெற்றது.

ஆசிரியர் எம் எப் எம் ஹுமாயூன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் பல சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தமது உதைபந்தாட்டத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இச்சுற்றுப்போட்டியில் தரம் 03 மாணவர்களுக்கான பிரிவில் போட்டியிட்ட Little Star அணி சம்பியன் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. ஐந்து மாணவர்களைக் கொண்ட இவ்வணியில் யூ . ஏ.எல். அஸைன் தாகிப், எம்.ஆர். அப்துர் ரஹ்மான், எம்.எப். முஹம்மத் பதீன், எம்.ஆர். ருஸைக் அஹ்மத், எம். ஷஹீத் அஹ்மத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சிறுவர்களின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்ப்பதுடன், அவர்களிடையே ஒழுக்கம், குழு உணர்வு, தலைமைத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் வெற்றி, தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

இச்சுற்றுப்போட்டியைச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர் எம் எப் எம் ஹுமாயூன் மற்றும் ஆசிரியர் துஃபைல் ஆகியோருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன், புத்தளம் நகரில் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக மற்றும் நலத்திட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவும் அனுசரணையும் வழங்கிவரும் புத்தளம் நகரக் கிளை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ஏ.பி.எம் ஜிப்னஸ் மௌலவி மற்றும் அவருடன் இணைந்து செயற்படும் குழுவினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

சிறுவர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி, ஒழுக்கமும் ஒற்றுமையும் நிறைந்த ஆரோக்கியமான எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கு இவ்வாறான போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال