35 ஆண்டுகள் தனது நீண்ட அரச பணிக்காலத்தில், கிராம சேவகராக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் மக்களுக்காகப் பணியாற்றி ஓய்வுபெறும் மதுரங்குளி விருதோடையை சேர்ந்த கிராம சேவையாளர் எம்.எஸ்.எம். முஸப்பிர் அவர்களுக்கு மனப்பூர்வமமான, இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீங்கள் பணியாற்றிய காலம் மிகவும் பொறுமதி வாய்ந்தவை. கொவிட் காலத்திலும், ஜனாசா நல்லடக்கம் விடயங்களிலும் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு சமூகத்துக்கு மிகவும் பெறுமதி வாய்ந்தவை.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும், மக்களுடனான உங்கள் உறவும் சமூகத்திற்கான உங்கள் சேவைகளும் என்றும் தொடரட்டும்.
உங்கள் அனுபவமும் வழிகாட்டலும் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணையாக இருக்கட்டும்.
இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான ஓய்வுக்காலத்தையும் வழங்கி அருள்புரிவானாக. ஆமீன்
ஜெஸீம் ரஹ்மான்
முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.

