எம்.யூ.எம்.சனூன்
அண்மையில் நடந்து முடிந்த மாகாண மட்ட கர்நாடக சங்கீதப் போட்டியில் சிரேஷ்ட நிலை பிரிவு இரண்டைச் சேர்ந்த என்.தனுர்திகா ஹரிணி என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
"மத்திய கால கீர்த்தனை பாடுதல்" போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றியே இம்மாணவி முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்.
பாடசாலை அதிபர் எஸ்.எல். அன்வர் மற்றும் சிலாபம் வலயக்கல்வி பணிமனை தமிழ் மொழிப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே. ஹனிதா கமலேந்திரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், பொறுப்பாசிரியர்களான எஸ்.எச். ஸமீனா ஹசன், எம்.எப்.எப்.பாசிலா, யூ.எல்.எப். ஹிமாயா ஆகியோரின் முயற்சியினால் இந்த வெற்றிகள் கிடைத்துள்ளன.
