Breaking News

மாற்று ஏற்பாடுகளின்றி தொடர் இருளில் மூழ்கிக்கிடந்த அம்பாறை முஸ்லிம், தமிழ் பிரதேசம்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பின்பு கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை நகரம் உட்பட பல பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் மாத்திரம் தொடர்ந்து பத்து நாட்கள் இருளில் மூழ்கியது.  


நாட்டில் யுத்தம் உச்சத்திலிருந்த 1990 காலப்பகுதிகளில் ட்ரான்ஸ்போமர்களும், மின் விநியோகப் பாதைகளும் அடிக்கடி குண்டுவைத்து தகர்க்கப்படுவதும், அது சரி செய்யும் வரைக்கும், ஓர் இரு நாட்களில் மாற்று வழிமுறைகள் ஊடாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.   


தற்போது இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்பு அம்பாறை நகரம், அதன் மேற்குப் பக்கமாக உள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் பிரதேசங்கள் மாத்திரம் பத்து நாட்கள் தொடர்ந்து இருளில் மூழ்கிக்கிடந்தது. 


எமது கரையோரப் பிரதேசங்களுக்கான மின்விநியோக கம்பங்கள் மற்றும் அதன் பாதையில் ஏற்பட்ட சேதங்கள், மண்சரிவுகள் காரணமாக அதனை சரி செய்வதற்கு கால அவகாசம் ஏற்பட்டது என்பது உண்மைதான். 


ஆனால் இருளில் கிடந்த சன நெரிசல்மிக்க கரையோர பிரதேசங்களுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடுகள் மூலமாக ஏன் மின்விநியோகம் வழங்கப்படவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்தது.  


இதற்கு மேலதிகமாக, எமது கரையோரப் பிரதேசங்களில் உள்ள வீடுகளில் உள்ள கூரைகளுக்கு மேலதிகமான கூரைகள் காட்சியளைப்பதனை காண்கிறோம். ஆதாவது சூர்ய சக்தி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரங்களுக்கு என்ன நடந்தது ? 


அம்பாறை நகரம் உட்பட அதன் மேற்காக உள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் இருந்தது. ஆனால் அம்பாறையுடன் அண்டிய வரிப்பத்தான்சேனை, இறக்காமம் ஆகிய கிராமங்கள் இருளில் கிடந்தது. 


எனவேதான் நீண்ட நாட்கள் எமது பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதற்கு மின்விநியோக பாதைகளின் சேதங்கள்தான் காரணம்.  


ஆனால் அது சீர்செய்யும் வரைக்கும் தற்காலிக ஏற்பாடுகள் செய்யாததுதான் ஏன் என்ற கேள்வி எழுகின்றது. தற்காலிக ஏற்பாடுகள் மூலமாக குறைந்தது நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலங்களாவது மின்விநியோகத்தை வழங்கியிருக்கலாம் என்பதுதான் எனது வாதமாகும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments