Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் அவர்களுக்கு புத்தளம் ஜம்இய்யத்துல் உலமாவினால் வரவேற்பு.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் அழைப்பை ஏற்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர் அதன் புத்தளம் காரியாலயத்துக்கு அண்மையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.


புதிய பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் பொருட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் பிரதி தலைவர் அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம். சௌகி பஹ்ஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீன், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ.நஜீம், இம்இய்யாவின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்தத்தில், நிவாரண நடவடிகைகளில் உலமாக்களின் பங்களிப்புக்களை கிலாகித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், எதிர்வரும் காலத்தில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு தன்னாலான அனைத்து உதவிகளை செய்வதாகவும் இதன் போது தெரிவித்தார்.









No comments