JobVibe.lk - Sri Lanka Job Portal

100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் - ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் உருக்கமான வேண்டுகோள்

100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் - மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலில் ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் உருக்கமான வேண்டுகோள்..!


மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.


இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதன்போது அவர், “மூதூரை மீண்டும் உயிர்ப்பிக்க 100 கோடி தேவையென்றாலும், நான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி பெற்றுத்தருகிறேன். மக்கள் அழிந்துபோய் தவிக்கும் இந்த நிலையை மாற்றவும் மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்பவும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என பிரதேச செயலாளரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.


மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி பிரச்சனைகள், குடிநீர், சுகாதாரம், வீட்டு சேதங்கள், வாழ்வாதார இழப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.


-- ஊடகப்பிரிவு





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال