புத்தளம் பூக்குளம் மீன்பிடி கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கிய கடற்படை
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், புத்தளம் வணாத்தவில்லு பிரதேச செயலகத்துடன் இணைந்து பூக்குளம் மீன்பிடி கிராம மக்களுக்கு நிவாரணம் செவ்வாய்க்கிழமை (09) வழங்கப்பட்டதுடன், நயாறு குளம் வழியாக அப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் கீழ், கடற்படை நானூற்று ஐம்பது (450) பேரையும் முப்பத்து மூன்று (33) மோட்டார் சைக்கிள்களையும் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை (09)கொண்டு சென்றது.
வெள்ளம் காரணமாக பயன்படுத்த முடியாத 438 குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்து பொது பயன்பாட்டிற்கு வழங்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பொது இடங்களை சுத்தம் செய்வதில் கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகின்றது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை விரைவாக தரையிறக்குவதற்கும் கடற்படை பங்களித்தது, மேலும் மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதில் கடற்படை தொடர்ந்து பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments