JobVibe.lk - Sri Lanka Job Portal

வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் வீரர்களை சந்தித்த கடற்படைத் தளபதி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட  புதன்கிழமை (10) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) வசிக்கும் கடற்படை போர் வீரர்களை சந்தித்தார்.


மேற்படி சந்திப்பின் போது, ​​போரில் காயமடைந்து வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் தங்கியுள்ள வீர கடற்படை வீரர்களின் நலனை விசாரித்த கடற்படைத் தளபதி, அவர்களின்  தேவையின் அடிப்படையில் வேலைத்திட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال