புத்தளம் எக்ஸ்ஸலண்ட் பாடசாலைக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை முஸ்லிம் செரட்டி செரன்டிப் (Muslim Charity Serendib Sri Lanka) அமைப்பின் திட்ட எண் 069 அடிப்படையில் புதன்கிழமை (10) புத்தளம் எக்ஸ்ஸலண்ட் (School of Excellence) பாடசாலைக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் இயக்குநர் முஜாஹித் நிஸார் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில், பல்வேறு பாடப் புத்தகங்களும் வாசிப்பு புத்தகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டன.
இந்த திட்டம், வெள்ளப் பாதிப்புகள் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி உறுதுணையாக இருக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதும், வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments