Breaking News

புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்திற்கான கொங்கிரீட் பாதை அமைக்கும் பணி ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். நில்பானின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்திற்கான கொங்கிரீட் பாதை அமைக்கும் பணி திங்களன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


ஏ.ஆர்.எம்.நில்பான் புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு சில மாதங்களில், முள்ளிபுரம் பகுதியில் சில பாதைகள் பொரல் இட்டு செப்பனிடப்பட்டதுடன், மற்றுமொரு பாதை கொங்கிரீட் பாதையாக பணரமைப்பும் செய்யப்பட்டது.


அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டிலும் இதே போன்று பல கொங்கிரீட் பாதைகளும், வடிகான்கள் அமைக்கும் வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் தெரிவித்தார்.









No comments