Breaking News

கற்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையின் தரம் ஐந்து மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்து வரை கல்வி கற்று தரம் ஆறிற்க்கு வேறு பாடசாலைகளை நோக்கி செல்லும் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு திங்கட்கிழமை (29) பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நௌப் தலைமையில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ், முன்னாள் அல்ஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம் ஹரமைன், கற்பிட்டி பிரதேச சபையின் ஓய்வு பெற்ற முகாமைத்துவ உத்தியோகத்தர் என்.டி ஹாஜித். முன்னாள் கற்பிட்டி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பீ.எம் பாஹீம், கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பௌசான், கற்பிட்டி பிராந்திய சுற்றாடல் முன்னோடிக் குழுவின் எச் எம் சுஹைப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










No comments