டித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை கட்டியெழுப்ப கடற்படையின் பங்களிப்பு
'(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
'டித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் பசரை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பதுளை கல்வி வலயங்களில் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ ஆதரவை வழங்குவதன் கீழ், பதுளை பிபிலேகம மகா வித்தியாலயம், அல் அமீன் வித்தியாலயம், ஶ்ரீ கனேஷா தமிழ் வித்தியாலயம், விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் மற்றும் மிஹிது பாலர் பாடசாலை ஆகியவை கடற்படையின் கலைத்துவ பங்களிடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் முக்கிய பங்காளியாக இருக்கும் இலங்கை கடற்படை, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை நனவாக்கும் வகையில் பாடசாலை வளாகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து பங்களித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.







No comments