கொய்யாவாடி அல் ஹிஜ்ரா வாலிபர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி கொய்யாவாடி அல் ஹிஜ்ரா நகரில் இயங்கி வரும் அல் ஹிஜ்ரா வாலிபர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உலர் உலர் உணவுப் பொதிகள் ஒன்றியத்தின் ஸ்தாபகர் அஷ்ஷேக் இல்ஹாம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது
அல் ஹிஜ்ரா வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் சாபீர் அஹமடின் வழிகாட்டலின் கீழ் அயல் கிராமங்களில் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றியத்தின் உறுப்பினர்களால் உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டது.
அல் ஹிஜ்ரா வாலிபர் ஒன்றியத்தின் சமூக சேவைகள் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments