பாலாவி – குவைத் கிராம மக்களுக்கு இலங்கை முஸ்லிம் சேரிட்டியினால் நிவாரண உதவிகள்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
பாலாவி – குவைத் கிராமத்தில் டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இலங்கை முஸ்லிம் சேரிட்டி அமைப்பின் சார்பில் மனிதநேய நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை (28) இலங்கை முஸ்லிம் செரிட்டி இயக்குநர் முஜாஹித் நிசார் தலைமையில் நடைபெற்றது
அண்மையில் ஏற்பட்ட அனர்த்ததினால் பல குடும்பங்கள் தங்களின் வேலை வாய்ப்புகளையும் வருமான வழிகளையும் இழந்து கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், அவர்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு பாய், தலையணை, துணிகள் (towels) உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய. இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
சமாதான நீதவான் ஏ. எஸ். ஜலீலின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹ்யா, பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சமூக முன்னணியாளர்களான சப்ரான், சமீர் மற்றும் கிராம இணைப்பாளர் நிசாம் ஆகியோர் இந்த மனிதநேய முயற்சியில் இணைந்து பங்களித்தனர்.
இந்த நிவாரண உதவித் திட்டத்தின் மூலம், டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட அவல நிலைகளை ஓரளவு சமாளிக்க கூடியதாக கிராம மக்களுக்கு அமையும் என்பதுடன் இலங்கை முஸ்லிம் சேரிட்டி எதிர்காலத்திலும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் தேவையுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண உதவிகளை செய்யும் என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments