கற்பிட்டி பிரமிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில் திறக்கப்பட்ட வெள்ள நிவாரண சேகரிப்பு மத்திய நிலையம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பிரமிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி சேகரிப்பு மத்திய நிலையம் கற்பிட்டியில் செவ்வாய்க்கிழமை (02) பிரதான வீதியின் காட்டுபாவா சந்தியில் திறந்து வைக்கப்பட்டது
சங்கத்தின் தலைவர் ஜே.எம் தாரிக் தலைமையில் இடம்பெற்ற வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு மத்திய நிலையத்தில் சேகரிக்கபடும் உலர் உணவு பொருட்கள் கற்பிட்டி பிரதேசத்திலும் புத்தளம் மாவட்டத்திற்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதன்கிழமை கற்பிட்டி பிரதான வீதியில் நடமாடும் நிவாரண பொருட்கள் சேகரிப்பு இடம்பெறும் எனவும் வியாழக்கிழமை கற்பிட்டி நகர் முழுவதும் நிவாரண பொருட்கள் சேகரிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



No comments