JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோக்கும் அதிகமான ‘ஐஸ்’ பேருவளையில் கைப்பற்றப்பட்டுள்ளது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை (02) பேருவளை, கலங்கரை விளக்கத் தீவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதர் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 260 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 68 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال