Breaking News

சூறாவளி மற்றும் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

எம்.யூ.எம்.சனூன்

இலங்கை மக்கள் முகம் கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட புத்தளம் நகர மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் புத்தளம் பெரிய பள்ளி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் மாநகர சபை போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் தொண்டர் அமைப்புக்களின் உதவியுடன் விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் உலர் உணவுப்பொருட்களை பணமாகவோ அல்லது பொருளாகவோ புத்தளம் பெரிய பள்ளியில் திறக்கப்பட்டுள்ள விஷேட அனர்த்த முகாமைத்துவ காரியாலயத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறு மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் (பெரிய பள்ளி) தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அனர்த்த முகாமைத்துவ மைய கணக்கு விபரம்:

Mohideen Jumma Mosque   

001-0001152-003

Amana Bank - Puttalam Branch




No comments