வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் சமைத்த உணவு வழங்கிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளதுடன், இதன் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சமைத்த உணவை வழங்குவதற்காக கடற்படையின் நடமாடும் சமையலறை மற்றும் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செவ்வாய்க்கிழமை ( 02) கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி, மீதொடமுல்ல, ஆரச்சிகட்டுவ மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்காக ஒரு நடமாடும் சமையலறை நிறுவப்பட்டுள்ளதுடன், அதே வேலையில் கடற்படையின் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையமானது கண்டி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் விநியோகம் தடைபட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது.








No comments