அனர்த்தப்பணி; கம்பளையில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எம். பி தொடர்ந்தும் களத்தில்..!
கம்பளை பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் துயரத்தை நிவர்த்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேரில் விஜயம் செய்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களை ஒருங்கிணைத்து சுத்தம் செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் முதன்மைக்கொண்டு, சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை உடனடியாகக் கையாள வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்து, களத்தில் செயல்படும் அவரது பணிபுரிதல், சமூகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.





No comments