75வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக 2025 டிசம்பர் 07 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளியில் ஒரு சமூக சுகாதார மருத்துவ சேவையும் இலங்கை கடற்படைக் கப்பல் நிபுணவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சியும் புதன்கிழமை (10) நடத்தப்பட்டது.
திருகோணமலை நிலாவெளி பகுதியில் நடைபெற்ற இந்த சமூக சுகாதார மருத்துவ மனையில் கலந்து கொண்ட மக்களுக்கு, கிழக்கு கட்டளை மருத்துவ ஊழியர்கள், திருகோணமலை லயன்ஸ் கிளப்பின் ஆதரவுடன், தொற்றா நோய் பரிசோதனைகள், குழந்தை சுகாதார பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை நடத்தினர்.
கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நிபுண நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டம், காலி, கராப்பிட்டி தேசிய மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் ஒருங்கிணைந்து, அந்த வங்கியின் இரத்த இருப்புக்களை முறையாக பராமரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் தன்னார்வத் தொண்டு செய்து அதற்கு பங்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.








No comments