Breaking News

புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் 47222 குடும்பங்களைச் சேர்ந்த 173165 பேர் பாதிப்பு 10 பேர் மரணம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

நாட்டின் திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தினால் புத்தளம் மாவட்டத்தில் 47ஆயிரத்து 222 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குற்பட்ட 47ஆயிரத்து 222 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட  செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3052 குடும்பங்களைச் சேர்ந்த 10994 நபர்கள் பாதிக்கப்பட்டு 10 பாதுகாப்பு நிலையங்களில் 351 குடும்பங்களைச் சேர்ந்த 1203 நபர்கள் தங்க வைககப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 


இதில் ஒரு லட்சத்து 73ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறித்த அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை 76 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 4ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 14ஆயிரத்து 328 பேர் 75 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 13ஆயிரத்து 4 குடும்பங்களை சேர்ந்த 47ஆயிரத்து 939 பேர் குறித்த மாவட்டத்தில் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் சிலாபம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 9ஆயிரத்து 214 குடும்பங்களை சேர்ந்த 35ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட 8ஆயிரத்து 923 குடும்பங்களை சேர்ந்த 31ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments