கற்பிட்டி பிரதேச மக்களுக்கு தனது சொந்த நிதியில் உடனடி நிவாரண உதவி வழங்கிய கூட்டுறவு தலைவர் சலாஹூதீன்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பகுதியில் இரண்டு நாட்களாக தொடராக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான உடனடி நிவாரண உதவியாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கான பகல் உணவு பார்சல்கள் சுமார் 800 குடும்பங்களுக்கு கற்பிட்டி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சலாஹூதீன் மற்றும் அவரின் புதல்வர் எஸ்.எம் றிம்ஸான் ஆகியோர் தமது சொந்த நிதியின் மூலம் வழங்கினர்.
கற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேத்தாவாடி, கண்டக்குழி, குரக்கஞ்சேனை, மணல் தோட்டம், முசல்பிள்ளை வத்தை அத்தோடு அல் அக்ஸா மற்றும் நிர்மலமாதா ஆகிய பாடசாலைகளில் தங்கி இருந்த சுமார் 75 நபர்களுக்கான பகல் உணவுகளுடன் இரவு நேர மற்றும் காலை நேர உணவுகளுடன் குடி நீர் போத்தல்களும் வழங்கி வைக்கப்பட்மையும் குறிப்பிடத்தக்கது.





No comments