Breaking News

ஈரான் – சியோனிச அரபு எமிரேட்ஸ் (UAE) மோதல் களமாக மாறியுள்ள சூடான்.

2019 இல் ஒமர் அல்–பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்பு சூடானில் நிலையான ஆட்சி இருக்கவில்லை. 2023 ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய உள்நாட்டுப் போரானது தற்போது Sudanese Armed Forces (SAF) மற்றும் Rapid Support Forces (RSF) இடையே கடுமையாக நடைபெற்று வருகிறது. 


இந்த போரில் காசா இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.    


ஈராக்கில் சதாம் ஹுசைன் தனக்கு விசுவாசமாக உருவாக்கிய குடியரசு படை போன்று, ஓமர் அல்-பசீர் தனது ஆட்சிக்காலத்தில் RSF படையை உருவாக்கியதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியாத ஆட்சியாளராக இருந்தார். இறுதியில் பசீரின் ஆட்சி முடிவுக்கு அவர் உருவாக்கிய RSF படையணியும் காரணமாக இருந்தது.   


2003 இல் தார்பூர் பிராந்திய இனப்படுகொலை குற்றச்சாட்டில் பசீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) 2009, 2010 ஆகிய ஆண்டுகள் பிடியாணை பிறப்பித்திருந்தது.  


பசீரின் ஆட்சியிலேயே 2011 இல் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற "தென் சூடான்" பிராந்தியம் தனிநாடாக சுதந்திரமடைந்தது. இது எண்ணை வளம் அதிகமுள்ள பிராந்தியமாகும். 


தற்போது சூடானில் நடைபெற்றுவருகின்ற மோதலானது உள்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமல்லாது வெளிநாட்டு சக்திகளின் புவி அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் பலப்பரீட்சைக் களமாக மாறியுள்ளது. 


குறிப்பாக ஈரானும் சியோனிச சார்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸும் (UAE) தங்கள் புவிசார்பு மற்றும் நலன்களை நோக்கியதாக சூடானை ஒரு புதிய “Proxy War” தளமாக மாற்றியுள்ளன.


RSF படைக்கு பெருமளவில் பணம், ஆயுத உபகரணங்கள், வாகனங்கள், வான்பாதுகாப்பு அமைப்புக்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வழங்கிவருவதுடன், இஸ்ரேலும், அமெரிக்காவும் இதற்கு மேலதிக உதவிகளை செய்கிறது.  


இதன்மூலம் சூடானில் இருக்கின்ற பெருமளவான தங்கங்களை (Gold) அகழ்வதற்கும், செங்கடல் பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதுடன், யேமன் ஹௌதிக்களுக்கு எதிராக சியோனிச இஸ்ரேலுக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்கும், சூடானிலிருந்து ஈரானை அப்புறப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். 


அதேநேரம் செங்கடல் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த சூடானில் சியோனிச இஸ்ரேல் மற்றும் அதன் சகாக்கள் காலூன்றி ஆதிக்கம் செலுத்துவதனை தடுத்து நிறுத்தும் நோக்கில், சூடானின் SAF படைக்கு ஆயுதங்களையும், ட்ரோன்களையும், பயிற்சிகளையும் ஈரான் வழங்கி வருகின்றது. 


அத்துடன் சூடானின் கடற்படைத் தளங்களை பயன்படுத்துவதன் மூலமாக செங்கடல் பிராந்தியத்தில் ஈரான் தனது இராணுவ வலிமையை நிலைநிறுத்த விரும்புகிறது.  


ஆபிரிக்கா கண்டத்தின் வடகிழக்கில் செங்கடலை ஒட்டியுள்ள சூடான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முக்கிய புவியியல் பாலமாக இருப்பதால், இங்குள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவது பிராந்திய ஆளுமைப் போட்டியாக உள்ளது.  


எனவேதான் சூடானில் தற்போது நடைபெற்று வருகின்ற உள்நாட்டுப் போரானது, ஈரானுக்கும் சியோனிச சார்பு (UAE, USA, Israel) சக்திகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக கருதப்படுகின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments