சர்வதேச கல்வி மாநாட்டிற்காக புத்தளம் கல்வியாளர் இல்ஹாம் மரைக்கார் கனடா பயணமானார்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கல்வி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளையும் சேர்ந்த Chamber of Commerce அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை கனடா வர்த்தக கவுன்சிலினால் தெரிவு செய்யப்பட்டு கனடாவில் நடைபெற உள்ள சர்வதேச கல்வி மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து குழாம் அனுப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுளாளதுடன் இலங்கை பல்வேறு நன்மைகளையும் அடைய உள்ளது.
மேற்படி மாநாடு நவம்பர் 02 ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும்.
இம் மாநாட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றுள்ள புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவரும் புத்தளம் மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரிகளின் பழைய மாணவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உளவியல் பீடத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றும் இல்ஹாம் மரைக்கார் கருத்து தெரிவிக்கையில்
இம் மாநாட்டின் முக்கிய அம்சங்களாக பன்னாட்டு கல்வி மற்றும் மாணவர் ஆதரவு, புதிய கூட்டண்மைகள் மற்றும் தொலைத்தொடர்பு வாய்ப்புகள், உலகளாவிய கல்வி மாற்றங்கள் குறித்த விவாதங்கள் என்பன முக்கிய அம்சங்களாக அமையும் எனவும் குறிப்பிடடமை குறிப்பிடத்தக்கது.



No comments