புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர்கள் அனுமதி - 2026
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவுக்கு 2026ம் புதிய கல்வி ஆண்டு ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை டிசம்பர் மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2026ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 8ம் அல்லது 9ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும், அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும், தேகாரோக்கியம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மௌலவி, அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கணணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களை பெறுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 30/11/2025ம் திகதிக்கு முன்னர் தமது பெயர், முகவரி, பிறந்த திகதி, பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த தரம், தேக ஆரோக்கியம் ஆகிய விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு அனுப்பி வைக்குமாறு அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 0756010034, 0788969384, 0774377788 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளலாம்.

No comments