Breaking News

புத்தளம் நல்லாந்தழுவை ஆரம்ப பாடசாலையில் தேசிய நூலக வாரம் அனுஷ்டிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நல்லாந்தழுவை ஆரம்ப  பாடசாலையில் தேசிய நூலக வாரம் அண்மையில் (27 - 31) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.


"புத்தகம் வாசிப்போம், உலகை வெல்வோம்" என்பது நூலக வாரத்தின் தொணிப்பொருளாகும்.


மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில், பாடசாலை அதிபர் எம்.வை.ஹுதைபா மற்றும் பிரதி அதிபர்களின் அழைப்பை ஏற்று  புத்தளம் பொது நூலக பிரதம நூலகரும், பட்டைய நூலகரும், இலங்கை நூலக சங்க விரிவுரையாளருமான கே.எம்.நிசாத் இதில் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கினார்.


வாசிப்பின் முக்கியதுவம், வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள், வாசிப்பு இன்மையால் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பாக இதன் போது மாணவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.








No comments