வடமேல் மாகாண ஷொட்டோகன் கராத்தே போட்டியில் புத்தளம் மாணவர்கள் வெற்றிகளை அள்ளிக்குவித்து சாதனை.
எம்.யூ.எம்.சனூன்
வடமேல் மாகாண ஷட்டோகன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமான பதக்கங்களை பெற்று சிறப்பான சாதனை புரிந்துள்ளனர்.
மாகாண மட்டத்திலான இந்த போட்டிகள் வென்னப்புவ சேர் அல்பட் பீரிஸ் உள்ளக விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய மட்ட போட்டிகள் இம்மாதம் 23ஆம் தேதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் வாஷி ஷோட்டோகன் கராத்தேடோ அசோசியேஷன் (WSKA) அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கு அதன் பிரதான போதனாசிரியர் எம்.பைரோஸ் பயிற்சியளித்துள்ளார்.
பதக்கங்களை அள்ளிக்குவித்து வெற்றி பெற்ற மாணவர்கள்,
எஸ்.டி.எம். அல்தாப், எம்.எஸ். சாப்ரின், எஸ்.எப். லுலு, எம்.ஆர்.எப். அம்னா, எம்.ஆர்.எப். அமனா, என்.எம். ஹைக்கா, சபியூர் ரஹான், ஆர்.எம். அன்சாப், எம்.எஸ். ஆப்ரான், எம்.சஹ்ரான், ஜே. ஐமான், எம்.இனாப், ஏ.ஆஷிப், சுஹாத், நாஸிம், சையான், எச்.பன்னா ஆகியோர்.



No comments