Breaking News

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட முஸ்லிம் கலாசார போட்டிகளில் புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எம் முபா இரண்டாம்  பிரிவின்  நஷீத் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதுடன் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர்  பீ.எம் முஸ்னி தெரிவித்தார்.


மேலும் அம் மாணவிக்கும் பெற்றோர்களுக்கும் மாணவிக்கு ஊக்கமளித்த ஆசிரியருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments