Breaking News

72 வது மீலாத் போட்டியில், மல்டிமீடியா விளக்க காட்சி போட்டி பிரிவில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம்.

எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தினால் (01) நடாத்தப்பட்ட 72 வது மீலாத் போட்டியில், மல்டிமீடியா விளக்க காட்சி போட்டி பிரிவில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.


இந்த போட்டி நிகழ்ச்சிகள் 01 ம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை, லில்லி அவென்யூவில் உள்ள சோனக இஸ்லாமிய கலாச்சார வளாகத்தில் இடம் பெற்றது.


கல்லூரி அதிபர் சரீனா பர்வீனின் வழிகாட்டலில், ஆசிரியைகளான எம்.என்.எப்.நிப்லா, எம்.எம்.முஷீரா, ஏ.ஆர்.எப்.வினோஷா ஆகியோரின் பயிற்றுவித்தலில் மாணவிகளான எம்.ஏ.அம்ரா, எம்.ஆர்.ஆர்.சனாரி, எம்.எப்.ஹீபா, ஏ.ஐ.அஸ்மா, எம்.எப்.மெஹ்ரிஸ் ஆகியோரே இதில் முதலிடம் பிடித்தவர்கள் ஆவர்.


இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக கல்லூரி அதிபர், ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழுவினருக்கு சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் சார்பாக அதன் தஃவா மற்றும் மதக்குழுவின் தலைவர் சித்தீக் முஹம்மது ஷாஸ்லி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இம்மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஷெய்கா பாத்திமா கட்டடம், லில்லி அவென்யூ, வெள்ளவத்தை, கொழும்பு - 06 இல் இடம்பெறவுள்ளது.




No comments