உமரியன்ஸ் மீண்டும் ஒரு தேசிய வெற்றி. பாடசாலையின் பெருமையை உயர்த்திய உயரம் பாய்தல் சாதனை.
எம்.யூ.எம்.சனூன்
எம்பிலிப்பிடிய மைதானத்தில் அண்மையில் (03) நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான" சேர் ஜான் டார்பட் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில்" புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலயத்தின் மாணவி டபில்யூ.ஏ.பி. தனுத்ரா உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இச்சாதனையின் பின்னால் பெற்றோர் செய்த நிலைத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு பெருமையை பெற்றுத்தந்த மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதிபர் சாஜஹான், அவரது வெற்றிகள் தொடர்ந்து, எதிர்காலம் ஒளிமயமாக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments