தென் மாகாணத்தில் பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பினரின் முக்கிய கலந்துரையாடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
தென் மாகாண கத்தோலிக்க திருச்சபையின் குரு முதல்வரும், கரித்தாஸ் செட்கோல் இயக்குநர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர், அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கள் ஆகியோருடனான பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையில் தென் மாகாண மலையக தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (31) மாலை கரித்தாஸ் செட்கோல் இயக்குநரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இக் கலந்துரையாடலின்போது தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழும் மலையக தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் கல்விப் பிரச்சினைகள் (ஆசிரியர்கள் மற்றும் வளங்கள் பற்றாக்குறை), மலையக இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி, நிலம் மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள், கலாச்சார மற்றும் மொழி பிரச்சினைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது, மேலும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் அரசாங்கம், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தென் மாகாண கத்தோலிக்க திருச்சபையின் குறு முதல்வரும் கரித்தாஸ் செட்கோல் இயக்குநருமான பேரருட்பணி மைக்கேல் ராஜேந்திரம் அருட்தந்தை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ. சுந்தரலிங்கம் பிரதீபன், அமைச்சரின் ஆலோசகர் மார்கஸ் ஓய்வுநிலை ஆசிரியர், திரு. ஒருங்கிணைப்பு செயலாளர் சிவனேஷன்,ஊடக செயலாளர் திரு. அஜித்குமார், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன், கரிட்டாஸ் செட்கோல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. மனுவெல், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் திட்ட இயக்குநர் திருமதி. லவினா ஹசந்தினி, காலி மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் திரு. மதன் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments