எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் நூலக பொறுப்பாளர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் நூலக பொறுப்பாளர்கள் அண்மையில் (03) புத்தளம் பொது நூலகத்துக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின் போது பொது நூலகத்தின் சிறுவர் பகுதி, இரவல் பகுதி, உசாத்துணை பகுதி போன்றவற்றை பார்வையிட்டதோடு அப்பிரிவுகளின் நடைபெறும் நூலக செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிந்து கொண்டதோடு நூலக பதிவு இடாப்பு, இரவல் வழங்கும் முறை என்பவற்றையும் அறிந்து கொண்டனர்.
பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிசாத் இது தொடர்பான விளக்கங்களை வருகை தந்தோருக்கு தெளிவு படுத்தினார்.




No comments