🇸🇦🤝🇱🇰 சவூதி அரேபியாவின் ஆதரவுடன் நடைபெறும் தேசிய குர்ஆன் மனனப் போட்டியின் முதற்தேர்வு காத்தான்குடியில் சிறப்பாக நிறைவு..!
✍️ எஸ். சினீஸ் கான்
சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தக்வா வழிகாட்டல் அமைச்சகத்தின் அனுசரணையிலும், இலங்கை முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பினாலும், நாட்டில் மூன்றாவது முறையாக நடைபெறும் தேசிய குர்ஆன் மனனப் போட்டியின் முதற்தேர்வு சுற்றுகள் நேற்றும் இன்றும் (22,23-11-2025) காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்றன.
இத்தெரிவுச் சுற்றுகளில், நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பல்வேறு வயது பிரிவுகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடனும், தன்னலமற்ற அர்ப்பணிப்புடனும் கலந்து கொண்டனர். அவர்களின் மனனம், ஓதுதல் மற்றும் திறமைகள் மூலம், குர்ஆன் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பும் உழைப்பும் வெளிப்படையாகப் புலப்பட்டது.
இப்போட்டி, இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் குர்ஆன் மனனத்தை ஊக்குவிக்கும் முக்கிய மேடையாக மாறியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய அறிவையும், மதிப்புகளையும் சமூகத்தில் வலுப்படுத்துவதற்கு இது பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
சவூதி அரேபிய அரசின் தொடர்ச்சியான ஆதரவும், இலங்கையில் அதனை செயல்படுத்தும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பு மற்றும் சகோதரத்துவ உறவுகளை மேலும் வலிமையூட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான தேர்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில், இறுதிப்போட்டிக்கான தகுதியான போட்டியாளர்கள் விரைவில் தெரிவு செய்யப்பட்டு அடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றப்படவுள்ளனர்.







No comments