புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்திற்கு இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி Tsugumi Toyota விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதரகத்தின் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி Tsugumi Toyota அண்மையில் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்கத்தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன், உப்பு உற்பத்தி சம்பந்தமாகவும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட உப்பு தட்டுப்பாட்டுக்கான காரணங்களையும் தெரிவித்து ஆங்கில பத்திரிகைக்கு எழுதிய ஆக்கம் ஒன்றை அவதானித்த Tsugumi Toyota அவர்கள் தலைவர் ரணீஸ் பதூர்தீனை நேரில் சந்திக்கவும், உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினரோடு சில கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த நேரடி விஜயத்தை மேற்கொண்டார்.
இதன் போது புத்தளத்தின் உப்பு உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டதுடன், புத்தளம் உப்பின் வரலாற்றையும் கேட்டு தெரிந்து கொண்டதோடு, உப்பு வாய்காலுக்கும் கள விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார்.
மேலும் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் உப்பு தொழிற்சாலைக்கு தேவையாக இருக்கின்ற இயந்திரங்களையும், ஜப்பான் நாட்டின் உதவியோடு பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளையும் செய்வதாகவும் இதன் போது அவர் உறுதியளித்தார்.








No comments