புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை சதுரங்க போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மாகாண மட்டத்தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள்.
பல முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு மாணவர்கள் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பெற்றதுடன் பல திறன் தடைகளை வென்று வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்கள்.
இவ்வாறான வெற்றிகளை பெற்றதன் அடிப்படையில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.வை ஹூதைபா தெரிவிப்பதுடன்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் அப்ரித் தௌபீக், நெறிப்படுத்திய எஸ் எ எம் சுக்ர் ஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் எம் வை ஹுதைபா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments