கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு தில்லையடி தேத்தாவாடி கிராமங்களுக்கான பிரதான வீதி நீரீல் மூழ்கி உள்ளது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை தமது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினியின் வழிகாட்டலில் கீழ் இடம்பெற்று வருகிறது.
அத்தோடு முழுமையாக நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள தில்லையடி மற்றும் தேத்தாவாடி பகுதிகளுக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நேரடி கள் விஜயத்தை மேற்கொண்டு நீரீல் முழ்கியுள்ள பகுதிகளில் நீரினை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளையும் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கைகளில் கற்பிட்டி பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
மேலும் கற்பிட்டி மண்டலக்குடா பகுதியில் வீடொன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டு கூரை இடிந்து வீழ்ந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது .
வெள்ளிக்கிழமை(28) காலை முதல் தடை பட்ட மின்சாரமும் இரவு 9 மணியை தான்டியும் சரி செய்யப்படாத நிலையில் முழு கற்பிட்டி பிரதேசமும் இருளில் மூழ்கி உள்ளது.







No comments