(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கையை பாதித்துள்ள பாதகமான வானிலை காரணமாக பெய்து வரும் கனமழையினால், திருகோணமலை, முத்தூர் கிண்ணியா மற்றும் அம்பாறை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை ( 28) காலை முதல் கடற்படையினர் மேற்கொண் வருகின்றனர்.
அதன்படி, திருகோணமலையின் மூதூர், ஷாபி நகர், கிண்ணியா மயலபஞ்சவெளி மற்றும் அம்பாறை கல்முனை கித்தண்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன.





