Breaking News

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளம் காற்றினால் நகரின் மத்தியில் சரிந்து வீழ்ந்த ஆல மரம் வெட்டி அகற்றப்படும் பணி ஆரம்பம்

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)


தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் காற்றின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது 


இதன்படி காற்றின் காரணமாக கற்பிட்டி நகர மத்தியில் காணப்பட்ட பாரிய பல வருடங்கள் பழமை வாய்ந்த ஆல மரம் சரிந்து பாதைக்கு குறுக்காக மின்சார கம்பத்தை உடைத்து பல பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பிகளையும் பாதிப்புக்குள்ளாக்கி வீழ்ந்து இருந்த ஆல மரத்தினை வெட்டி அகற்றும் பணி சனிக்கிழமை (29) காலை முதல் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன்  ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது அத்தோடு கற்பிட்டி கடற்படையினரும் இப்பணியில் இணைந்து கொண்டமையும் விஷேட அம்சமாகும் 


அதன் காரணமாக கற்பிட்டி நகர் முழுவதும் வெள்ளிக்கிழமை (28) காலை முதல் மின் தடைப்பட்டுள்ளது. தடை பட்ட மின்சாரம் சனிக்கிழமை (29) காலை 10 மணியளவில் மின்கம்பிகள் சேதமடைந்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 11.30 மணியளவில் தடைப்பட்டுள்ளது.


அத்தோடு தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழையும் சனிக்கிழமை (29) முதல் நின்று இருந்த நிலையில் பகல் வேளை சிறிய தூரலுடன் ஆரம்பமாகியதையும் காணமுடிகிறது.









No comments