உரிமை கோருகின்றவர்கள் இந்த உண்மையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நிந்தவூரில் கலாச்சார மண்டப 300 மில்லியன் ஒதுக்கீட்டுக்காக உரிமை கோருவதில் இழுபறி நிலவுகிறது.
ஆனால் ஒரு உண்மையை யாரும் மறந்துவிடக் கூடாது. அதாவது இந்த கட்டிடத்திற்காக நிலம் வாங்கப்பட்டு அதன் ஆரம்ப வேலைகள் இரண்டு கோடி ரூபா செலவில் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 50 ரூபாய். இப்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 310 ரூபாய். அன்றைய இரண்டு கோடி ரூபாயானது இன்றைய நாணய பெறுமதியில் எவ்வளவு தொகை என்பதனை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
அதுபோல் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலமாக அவரது நகர திட்டமிடல் அமைச்சினால் முதல் கட்டமாக 75 மில்லியன் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 130 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. அப்போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 130 - 140 ரூபாய். இன்றைய நாணய பெறுமதியை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இந்த கட்டிடத்தை பூரணப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது 2019 இல் ஆட்சி மாற்றத்தினால் தடைப்பட்டது. இதற்காக உழைத்த ஹசனலி சேரின் தம்பி மர்ஹூம் ஜப்பார் அலி மற்றும் முன்னாள் எம்பி பைசல் காசிம் ஆகியோர்களை மறந்துவிட முடியாது.
எனவேதான் பூரனப்படுத்தப்படாமல் இருக்கின்ற நிந்தவூர் கலாச்சார மண்டபத்துக்காக 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டதனை உரிமை கோறுகின்றவர்கள் அதன் ஆரம்ப வரலாற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முயற்சித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments