புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் பாடசாலைக்கு பெருமை சேர்த்த தேசிய சாதனை மாணவி கௌரவிப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மாணவி ஏ எம் பீ தமூர்த்தி தேசியமட்ட மெய்வல்லுனர் நிகழ்வில் உயரம் பாய்தல போட்டியில் இரண்டாம இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் இது பாடசாலை வரலாற்றில் இவ்வருடத்தில் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் பெற்றுக் கொண்ட மூன்றாவது தேசிய வெற்றியுமாகும் என பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் தெரிவித்துள்ளார்
மேற்படி மாணவிக்கான கெளரவிப்பு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.



No comments