கற்பிட்டி தில்லையடி கிராமத்திற்கான பாதை புணரமைப்பு வேலை திட்டம் ஆரம்பம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையடி கிராம மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த பாதை புணரமைப்பு வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக இக்கிராம மக்களினதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினதும் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக காணப்பட்ட கற்பிட்டி தில்லையடி கிராமத்திற்கான பாதையினை கற்பிட்டி பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் தொடரான கோரிக்கை மற்றும் முயற்சியின் காரணமாகவும் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸின் தலையீட்டின் ஊடாக உலக வங்கியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் இப்பாதையை புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு உள்ள ஒரே ஒரு பாதை இது என்பதால் இரண்டு மாத கால எல்லைக்குள் பாதை புணரமைப்பு வேலைகளை நிறைவு செய்வதாகவும் ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்துளளமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பாதையினை ஓரிரு மாதங்களுக்குள் செய்து முடிப்பதற்கான காலயெல்லையும் வழங்கப்பட்டுள்ளது.



No comments