கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற ஆங்கில கல்வி தொடர்பான பயிற்சி பட்டறை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் வியாழக்கிழமை (06) ஆங்கில கல்வி தொடர்பான பயிற்சி பட்டறை ஒன்று பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நவ்ப் தலைமையில் இடம்பெற்றது
அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஸ்ரா பானுவின் ஏற்பாட்டில் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் ஏ.எம் அன்வர் சதாதின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற மேற்படி ஆங்கில கல்வி பயிற்சி பட்டறையில் அல் ஹிரா பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 04 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்
அத்தோடு கற்பிட்டி கோட்டக் கல்வி பணிமனையின் ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் எம் இஸ்பஹான் ஆகியோரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






No comments