Breaking News

மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உதவிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

தீவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, குருநாகலில் உள்ள மஹவ கல்டன் குளத்தின் நீர்மட்டம் பெருக்கெடுத்தல் மற்றும் புத்தளம் எலுவன்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் வெள்ளிக்கிழமை (28,) காலை மேற்கொண்டன.


அதன்படி, கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள், உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன், மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments