Breaking News

போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி, புத்தளம் அக்கரைப்பற்று உலமா சபை மற்றும் மஸ்ஜித் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு!.

 بسم الله الرحمن الرحيم

மதிப்பிற்குரிய மஸ்ஜித் தலைவர், செயலாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஊடாக ஊர் ஜமாத்தார்கள் அனைவருக்கும்.  


அன்புடையீர், 

السلام عليكم ورحمه الله وبركاته

கடந்த 2025/11/23 ம் திகதி நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி தொடர்பாக .


மேற்படி விடயம் தொடர்பாக எமது அன்பான அழைப்பை ஏற்று செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் எமது அக்கரைப்பற்று மஸ்ஜித் சம்மேளனம் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


விஷேடமாக இந்த விடயத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல ஆலோசனையில் கலந்து கொண்டு ஊர் மட்டத்தில் சகல விடயங்களையும் முன்னெடுத்த பள்ளி வாயில் நிர்வாக உறுப்பினர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள், வாகனப் பேரணியில் கலந்து கொண்ட ஊர் ஜமாத்தினர் மற்றும் இது தொடர்பான நிதி உதவி சதுர உதவி, ஆலோசனைகள், வாகன உதவி போன்றவற்றை செய்து தந்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா உங்கள் அனைவருக்கும் மேலான அருளையும் ஆரோக்கியத்தையும் ரஹ்மத்தையும் வழங்குவானாக. 


மேலும் எமது பிரதேசத்தில் போதை பாவனை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமான பொது மக்களை விழிப்புணர்வு உண்டாக்குதல் என்ற விடயமே சர்வமத பேரணியாக சென்ற 23 ஆம் தேதி நடைபெற்றது. இதன் அடுத்த கட்டங்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. என்பதையும் உங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு அதற்கான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் எமது பிரதேசத்தின் இந்த மாபெரும் கொடிய போதைப்பொருள் தாக்கத்திலிருந்து எமது கிராமங்களை மீட்டெடுப்பதற்கு முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதற்காக அல்லாஹுத்தஆலா எம் அனைவருக்கும் பூரண உதவியை வழங்குவான் என்ற திடமான நம்பிக்கையும் நாம் இழக்கவில்லை. 


எனவே மீண்டும் உங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

ஆமீன். 

இப்படிக்கு 

தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அக்கரைப்பற்று மஸ்ஜித் சம்மேளனம் சார்பாக 

தலைவர்

 அஷ்ஷெய்க் எம். எம். எம். மிஹ்லார் (நளீமி) அதிபர்.






























No comments