பமுனுகம, கெபும்கொட மற்றும் வெல்லாவிடிய பகுதிகளில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 2250 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், பமுனுகம, கெபும்கொட மற்றும் வெல்லாவிடிய பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து சனிக்கிழமை (22) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது (2250) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி சனிக்கிழமை (22) பமுனுகம பகுதியில் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கெலானி, பமுனுகம காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு (01) சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று எண்பது (480) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) சந்தேக நபரையும் குறித்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
களனி நிறுவனம், பமுனுகம மற்றும் துன்கல்பிட்டி காவல் நிலையங்களுடன் இணைந்து, சனிக்கிழமை (22 ) மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று (03) டிங்கி படகுகளை ஆய்வு செய்து, குறித்த டிங்கிகள் மற்றும் மூன்று (03) டிங்கிகளில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தாறு (1776) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பமுனுகம மற்றும் துன்கல்பிட்டி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.


No comments