Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினர் தப்தர் ஜெய்லானி (கூரகல) கள விஜயம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சபரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில், பலாங்கொடை , தப்தர் ஜெய்லானி ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் அழைப்பின் பேரில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தேசியத் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செயலாளர் நிசாம் காரியப்பர்(PC), பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான எஸ்.எம்.எம். முஷர்ரப் , அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் ஆகியோர் நேற்று (25) அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்ருந்தனர்.


இதன்போது  பலாங்கொடை தப்தர் ஜெயிலானி ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் சார்பில் அதன் தலைவர் அல்ஹாபிழ் மௌலவி அப்துல்லாஹ், செயலாளர் சிராஸ் சம்சுதீன், உபதலைவர் சிராஜ் நஜாஹி, சல்மான் நஜாஹி மற்றும் உலமாக்களும், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி முபிஸால் அபுபக்கர், தொழிலதிபர் கபூல் ஆஸாத் ஆகியோரும் பங்குபற்றியதோடு, கலந்துரையாடலும் நடைபெற்றது.


தொன்மை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பலாங்கொடை தப்தர் ஜெய்லானி ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரியங்களையும், உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.


புனிதம் வாய்ந்ததாக மதிக்கப்படும் இந்தப் பிரதேசம் பின்நாட்களில் கூரகல என்றும் குறிப்பிடப்படுகின்றது.


அத்துடன், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவருடன் வருகை தந்திருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டதும் குறிப்பிடத்தக்கது.









No comments