JobVibe.lk - Sri Lanka Job Portal

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

 (அஸ்லம் எஸ்.மெளலானா)

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (25) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. 

 

போரத்தின் தலைவராக இருந்த எம்.எஸ்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் மனித நேய நற்பணி மன்றத்தின் தலைவருமான இர்ஷாத் ஏ. காதர் நிர்வாகத் தெரிவை நடாத்தி வைத்தார்.


இதன்போது தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.


அவ்வாறே அமைப்பின் செயலாளராக யூ.கே. காலித்தீன், பொருளாளராக எம்.எஸ்.எம். அப்துல் மலீக், தவிசாளராக எம்.எஸ்.எம். ஹனிபா, பிரதித் தலைவர்களாக  எம். சஹாப்தீன், ஏ.எல்.ஏ. நிப்றாஸ்,  அமைப்பாளராக யூ.எல். றியாஸ், உப செயலாளராக வி. சுஜிதகுமார், கணக்குப் பரிசோதகராக எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.பி.எம். அஸ்ஹர், எம்.ஏ.ஆர்.எம். முஸ்தபா, அஸ்லம் எஸ். மௌலானா, எல். கஜரூபன், ஐ.ஹுசைனுத்தீன், எம்.ஐ.எம். நவாஸ், என்.எம்.எம். புவாத், ஏ.எஸ்.எம். அஸ்மீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال