புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம் நிகழ்வு சனிக்கிழமை (25) புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, புத்தளம் தள வைத்தியசாலை, புத்தளம் வியாபார சங்கம், புத்தளம் நஹ்தா அமைப்பு, Medical Relief Society, சிட்டி போய்ஸ் அமைப்பு மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த இரத்த தானம் நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு அஷ்ஷேக் நஸ்பான் இஹ்யாயின் கிராஅத்தை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.
இரத்த தானம் நிகழ்வில் அதிகமான உலமாக்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், வைத்தியர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சகோதர சமூகத்தை சேர்ந்த அதிகமானவர்கள் இரத்தம் வழங்கினார்கள்.
100 க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தாலும் 98 நபர்களின் இரத்தம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக சர்வமத குழு வருகை தந்து புத்தளத்தில் இவ்வாறான சேவைகள் முக்கியமானது என்று கூறி பிரார்த்தனைகளும் செய்தனர்.
இரத்தம் கொடுத்த அனைவருக்கும் அ.இ.ஜ.உ புத்தளம் நகரக்கிளையினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.















No comments